கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 May 2022 4:53 PM GMT (Updated: 23 May 2022 5:07 PM GMT)

கோவையில் கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 81-வது வார்டுக்கு உட்பட்ட ராஜவீதி, ரங்கேகவுடர் வீதி, டி.கே.மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story