40 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.3 லட்சம் பறிமுதல்


40 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.3 லட்சம் பறிமுதல்
x

காரைக்குடி அருகே 40 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் குற்றத்தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குன்றக்குடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அதில் வந்த திருமயம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது (வயது 42) என்பவர் மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ குட்கா பொருட்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பிள்ளையார்பட்டியில் பால் மற்றும் குளிர்பானங்கள் கடை வைத்திருக்கும் தண்டபாணி (வயது 35) என்பவர் இப்பகுதியில் குட்கா மொத்த விற்பனையாளர் என்ற தகவலை அறிந்தனர். அதன் பேரில் பிள்ளையார்பட்டி சென்ற போலீசார் தண்டபாணி கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது தண்டபாணி கடையின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அவர் கார் மூலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வினியோகம் செய்து வந்ததும் மேலும் குட்கா விற்ற பணம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்த விசாரணையில் தண்டபாணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து குட்கா சப்ளை செய்யப்படுவதை போலீசார் அறிந்தனர்அதன் பின்னர் இதுகுறித்து குன்றக்குடி போலீசில் வழக்கு பதிவு செய்து தண்டபாணி, அப்துல் சமது ஆகியோரை கைது செய்து 40 கிலோ குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். இது குறித்து தனிப்படை போலீசார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story