தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற 40 பேர் கைது


தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற 40 பேர் கைது
x
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவற்றை பதுக்கி விற்பனை செய்த 40 பேரை கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story