மீன் பண்ணை அமைக்க 40 சதவீதம் மானியம்: கலெக்டர் தகவல்


மீன் பண்ணை அமைக்க 40 சதவீதம் மானியம்:  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2022 2:42 PM GMT (Updated: 10 Aug 2022 10:26 AM GMT)

மீன் பண்ணை அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் வளர்ப்பை ஊக்குவித்து விவசாயிகளின் வருமானத்தை 3 மடங்கு உயர்த்தவும், மக்களுக்கு மீன்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யவும் ஏதுவாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரதம மந்திரி மீன் வளமேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன் பண்ணை அமைக்க, புதிய மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மீன் வளர்க்க உள்ளீட்டு மானியம் 40 சதவீதம் வழங்கப்படுகிறது. பயோபிளாக் தொழில் நுட்பத்தின்படி மீன் வளர்க்க 40 சதவீதமும், அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகள் அமைக்க 40 முதல் 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தில் பயன்பெற வைகை அணையில் உள்ள மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story