ஆனைமலை வேளாண் மையத்திற்கு 40 டன் ஜிப்சம் உரம் வந்தது-அதிகாரி தகவல்


ஆனைமலை வேளாண் மையத்திற்கு 40 டன் ஜிப்சம் உரம் வந்தது-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை வேளாண் மையத்திற்கு 40 டன் ஜிப்சம் உரம் வந்தது என்று அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை வேளாண் மையத்திற்கு 40 டன் ஜிப்சம் உரம் வந்தது என்று அதிகாரி தெரிவித்தார்.

40 டன் உரம்

ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆனைமலை வேளாண்மை மையத்தில் முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 40 டன் ஜிப்சம் உரம் மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் 10 டன் நிலக்கடலை வந்து உள்ளது. இதில் ஜிப்சம் விவசாயிக்கு ஒரு ஹெக்டருக்கு 400 கிலோ வழங்கப்படுகிறது. 50 கிலோ எடை கொண்ட ஒரு ஜிப்சம் மூட்டை வெளிச்சந்தையில் 196 ரூபாய், வேளாண்மை மையத்தில் 50 சதவீதம் மானியம் கழித்து ஒரு மூட்டைக்கு 98 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது மேலும் ஒரு விவசாயி 50 கிலோ எடை கொண்ட 8 மூட்டைக்கு 788 ரூபாய் கட்டணம் கட்டி புன்செய் நிலத்தில் போடப்பட்டுள்ள சிட்டா சான்றிதழ், ஆதார் எண் கொடுத்து வாங்கி செல்லலாம்.

100 ஹெக்டர் இலக்கு

மேலும் விதை கிராமம் திட்டத்தின் கீழ் கதிரிலப்பாக்ஸ்சிம் என்ற நிலக்கடலை தேசிய விதைச் சான்று பெற்றுள்ளது. மேலும் ஒரு கிலோ 50 சதவீதம் மானியத்தில் 86 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தரணி என்ற ரகம் மானிய விலையில் 62 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:- ஆனைமலை ஒன்றியத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்ய 100 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தற்போது மழைக்காலம் இல்லாததால் இரவை நிலக்கடலை பயிரிட சரியான தருணம். விதைகள் 11 மாதங்களுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். விவசாயிகள் விதைகளை இருப்பு வைத்து தை பட்டத்திற்கு பயிரிடலாம். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story