400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2023 12:30 AM IST (Updated: 10 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சி பகுதியில் 400 கிலோ பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த குப்பைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி சுகாதார அலுவலர் விவேக்கிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கூடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் சுகாதார அலுவலர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதில் மெயின் பஜார் வீதி, காய்கறி மார்க்கெட், எல்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பயன்படுத்திய 400 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த கடை உரிமையாளர்களிடம் மீண்டும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.கூடலூர் நகராட்சி பகுதியில் 400 கிலோ பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story