400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

குளச்சல்,

குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு சீனிவாசன் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளச்சல் பீச் சந்திப்பில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி கடத்திச் செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சிறு பிளாஸ்டிக் பைகளில் 400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story