402 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


402 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

402 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தஞ்சாவூர்

திருவையாறு

திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் ரஞ்சன்கோபால் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் அனந்தராமன் முன்னிலை வகித்தார். விழாவில் ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் கலந்துகொண்டு 402 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் பேரூராட்சிமன்ற உறுப்பினர் சசிகலாகுமணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story