திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,021 பேர் விண்ணப்பம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,021 பேர் விண்ணப்பம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,021 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பத்துர் மாவட்டத்தில் 530 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 298 இடைநிலை ஆசிரியர் பணியிடமும், 56 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 119 பட்டதாரி ஆசிரியர் பணியிடமும், 58 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 31 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் என மொத்தம் 448 ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கடந்த 4-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

விண்ணப்பிக்க கடைசி நாளாக திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காலை முதலே ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர். பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் காத்து இருந்து விண்ணப்பங்களை அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்துர், வாணியம்பாடி ஆகிய 2 மாவட்ட கல்வி அலுவலங்களிலும் 448 காலி பணியிடங்களுக்கு சுமார் 4,021 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


Next Story