407 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 407 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் 407 பரத நாட்டிய மாணவிகள் பங்கேற்ற செம்மொழி உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் அவர்கள் சைவ சமய குரவர்கள் நால்வரின் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) சைவத் திருமுறைகளின் கருத்தாக்கத்தை 15 நிமிடங்கள் பரத நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்தினர்.
சென்னை கொரட்டூரில் உள்ள சங்கர நாட்டிய வித்யாலயா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கீதா சிவகுமார் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு செம்மொழி உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story