கன்னியாகுமரியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 41 பேர் கைது
கன்னியாகுமரியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை தவிர்த்து வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாரத விடுதலை முன்னணி அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பிரசார பயணம் மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்து கன்னியாகுமரிக்கு நேற்று வந்தனர். இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். ஆனால் தடையை மீறி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விக்கிசவுத்ரி தலைமையில் தேசிய தலைவர் வாமன்மிஸ்ரம் உள்பட 41 பேர் கன்னியாகுமரியில் இருந்து பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story