410 கிலோ கஞ்சா, ஒரு கிலோ போதை பவுடர் பறிமுதல்- தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டதா?
இலங்கையில் ஒரே நாளில் 410 கிலோ கஞ்சாவும், ஒரு கிேலா போைத பவுடரும் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரம்
இலங்கையில் ஒரே நாளில் 410 கிலோ கஞ்சாவும், ஒரு கிேலா போைத பவுடரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா பறிமுதல்
இலங்கை நீர்கொழும்பு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் படகு ஒன்றை சோதனை செய்தபோது அதில் 410 கிலோ கஞ்சா பார்சல்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இலங்கையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாகவே கடத்தி வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. கேரளாவில் இருந்து அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டதா? என்பது குறித்தும் ராமேசுவரத்தில் உள்ள உளவு பிரிவு போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பவுடர்
இதே போல் மன்னார் கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்றில் இருந்து 1 கிலோ போதை பவுடரையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் இலங்கையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஒரே நாளில் கஞ்சா மற்றும் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமேசுவரம் பகுதியில் உள்ள மத்திய மாநில உளவு பிரிவு போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.