சாலைகள் சேதமடைந்ததாக 4,100 புகார்


சாலைகள் சேதமடைந்ததாக 4,100 புகார்
x

சாலைகள் சேதமடைந்ததாக வாட்ஸ்-அப் எண்ணில் 4,100 புகார் வந்து உள்ளன

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்டு 7 ஆயிரம் வீதிகள் உள்ளன. இங்கு 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள் உள்ளன. அவை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியில் தற்போது பல சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.93 கோடி ஒதுக்கப் பட்டது.

அதில் 355 இடங்களில் 100 கி.மீ. தூரத்துக்கு சாலை களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே மாநகர பகுதியில் சேதமடைந்த சாலைகள் குறித்து புகைப்படம் எடுத்து 8147684653 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார் அனுப்பலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாநகர பகுதி மக்கள் பலர் அந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு சேதமடைந்த சாலைகள் குறித்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சேதமடைந்த சாலைகள் தொடர்பாக மாநகராட்சியின் வாட்ஸ்- அப் எண்ணுக்கு கடந்த 3 மாதத்துக்குள் 4 ஆயிரத்து 100 புகார்கள் வந்து உள்ளன. அதன் ஒருபகுதியாக தான் தற்போது 355 இடங்களில் சேதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றனர்.


Next Story