விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 42 போ் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 42 போ் கைது
x

திருப்பனந்தாளில் கவர்னர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாளில் கவர்னர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்பு பணி

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வந்தார். கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று கும்பகோணம் அருகே அணைக்கரை ஒழுகச்சேரியில் உள்ள மாணிக்க நாச்சியார், கைலாசநாதர் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார்.

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு

திருப்பனந்தாள் அருகே உள்ள திருவாய்ப்பாடியில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் விவேகானந்தன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கவர்னரை கண்டித்து திரும்பி போ என்று கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 42 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story