மது விற்ற 42 பேர் கைது;819 மதுபாட்டில்கள் பறிமுதல்


மது விற்ற 42 பேர் கைது;819 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

மது விற்ற 42 பேர் கைது செய்யப்பட்டனா். 819 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டம் முழுவதும் மது விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 819 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story