சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 42 பேர் கைது


சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 42 பேர் கைது
x

கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் நேற்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்ட 42 பேரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்து பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story