42 வீரர்கள், வீராங்கனைகள் சென்னைக்கு பயணம்


42 வீரர்கள், வீராங்கனைகள் சென்னைக்கு பயணம்
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 42 வீரர்கள், வீராங்கனைகளை சென்னைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழி அனுப்பி வைத்தார்.

வேலூர்

காட்பாடி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 42 வீரர்கள், வீராங்கனைகளை சென்னைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழி அனுப்பி வைத்தார்.

மாவட்ட அளவில் வீரர்கள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடந்தது.

இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 23 ஆயிரம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுமார் 3 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

778 வீரர்கள் தேர்வு

இதில் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து 778 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 25-ந் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடக்கிறது.

மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களில் முதற்கட்டமாக 68 பேரை கடந்த மாதம் 29-ந் தேதி பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வழி அனுப்பு விழா

இந்த நிலையில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள பள்ளிகளுக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 40 வீரர்கள், வீராங்கனைகள், அரசு பணியாளர்கள் பிரிவிலிருந்து மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட 2 வீரர்களையும் என மொத்தம் 42 பேரையும் மாவட்ட விளையாட்டு மையம் அருகில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

அவர்களிடம் கலெக்டர் கூறுகையில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

அப்போது வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story