சேலம் கண்காட்சியில் 420 நாய்கள் பங்கேற்பு


சேலம் கண்காட்சியில் 420 நாய்கள் பங்கேற்பு
x

அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 420 நாய்கள் கலந்து கொண்டன.

சேலம்

அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 420 நாய்கள் கலந்து கொண்டன.

நாய்கள் கண்காட்சி

'தி சேலம் அக்மெ கென்னல் கிளப்' சார்பில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி சேலம் 4 ரோட்டில் உள்ள சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் பல்வேறு அரிய வகை நாய்கள் கலந்து கொண்டன.

இதுகுறித்து கிளப்பின் செயலாளர் நடராஜன் கூறியதாவது:-

இந்த காண்காட்சியில் புனே, கோலாலம்பூர், மராட்டியம், பெங்களூரு, கேரளா, சென்னை, பஞ்சாப், போபால், கொல்கத்தா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய்கள் கலந்து கொண்டன. அதன்படி பொமனேரியன், டேஸ்ஹவுண்ட், பீகிள், ராட்வீலர், டால்மேசன், கேன் கார்சோ, செயின் பெர்னார்டு, கிரேட்டன், டாபர்மேன், மினியச்சரா, பின்சர், காக்கர் ஸ்பேனியம், புல்டாக், ஐரிஸ்டிடம், செயின் பெர்னார்ட், சலூகி, பூடுல், மிகவும் அரிய வகை இனமான ரொடிஸியன் ரிட்ஜ்பெக், புல்டெரியா உள்ளிட்ட 45 வகையில் 420 நாய்கள் கலந்து கொண்டன. தேசிய தரச்சான்று பெற்ற நாய்கள் மட்டுமே கண்காட்சியில் அனுமதிக்கப்பட்டன.

பரிசு, கோப்பைகள்

11 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் செல்ல பிராணிகள் (நாய்கள்) தேர்வு செய்யப்பட்டன. அதன்படி வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்கள் 11 பேருக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. இந்த கண்காட்சி 15-வது ஆண்டாக நடத்தப்பட்டு உள்ளன.

கொரோனா தொற்று காரணத்தால் கடந்த 2 ஆண்டுகள் கண்காட்சி நடத்த வில்லை. இதில் நடுவர்களாக ஐதராபாத்தை சேர்ந்த திரிவேதி, எக்னோ, முனிர் ஜாப், கான்பூரை சேர்ந்த ரஞ்சித், முன்ஜால் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த நாய்களை தேர்வு செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை கிளப் தலைவர் விசுகாளியப்பன், செயலாளர் சாந்தமூர்த்தி, உதவி செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சீனிவாசன், செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story