420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

முட்டத்தில் 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முட்டம் தோணிமுக்கு சந்திப்பில் சென்றபோது, அங்கு ஒரு வீட்டின் முன் சந்தேகப்படும் வகையில் 12 பிளாஸ்டிக் கேன்கள் இருப்பதை போலீசார் கண்டனர். உடனே, அவற்றை சோதனை செய்தபோது அதில் 420 லிட்டர் படகுகளுக்கு வழங்கப்படும் அரசின் மானிய மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story