காரில் கடத்தி சென்ற 429 மதுபாட்டில்கள் பறிமுதல்


காரில் கடத்தி சென்ற 429 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

ஆலங்குடியில் காரில் கடத்தி சென்ற 429 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபண்டே உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் ஆலங்குடி அண்ணா நகரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் அதிவேகமாக அங்கிருந்து சென்றது. இதையடுத்து, போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து தங்களது காரில் சென்றனர். இதனால் பீதியடைந்த மர்ம ஆசாமிகள் அந்த காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 429 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவற்றை ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story