435 மதுபாட்டில்கள் பறிமுதல்


435 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 435 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பூவநாதபுரம் விலக்குப்பகுதியில் தோப்பிற்கு அருகே விற்பனைக்காக 2 பேர் மது பாட்டில்களை வைத்து இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது மாரிச்செல்வம் (வயது 26), வனராஜ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 331 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.15,050-யும் பறிமுதல் செய்தனர். அதேபோல் அதேபகுதியில் அனுமதியின்றி மது விற்ற பாலசுப்பிரமணியன் (41), அழகு மருது (22) ஆகியோரை ைகது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 104 மது பாட்டிலையும், ரூ.8,580-யும் பறிமுதல் செய்தார்.


Next Story