உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு


உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நினைவு தினம்

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் மூக்கையாத்தேவரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடத்தில், தி.மு.க. சார்பில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் இளமகிலன், ஒன்றிய செயலாளர்கள் முருகன்,பழனி செல்வ பிரகாஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி..உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜன், நகர் செயலாளர் பூமா ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார்,செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, அவைத்தலைவர் பண்பாளன், கூட்டுறவு சங்கத் தலைவர் ரகு, மருத்துவமனை மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், எழுமலை நகர் செயலாளர் வாசிமலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், தவசி, நீதிபதி டாக்டர் சரவணன், தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் தர்மர் எம்.பி., தலைமை கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன், அமைப்புச் செயலாளர் ராமமூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட நிர்வாகி பிரபு, அம்மா பேரவை செயலாளர் கார்த்திகை சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், நகர் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஜான்சன், வேங்கை மார்பன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யர் என்ற ராமகிருஷ்ணன், பெருமாள், கார்த்திகை சாமி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவா, நகர் செயலாளர் ராஜாமணி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதே போல் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.


Next Story