ரூ.4.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது
ரூ.4.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி,
ரூ.4.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் காளைத்தேவர் நகரை சேர்ந்த முத்துகணேஷ் (வயது 43) தனது வீட்டில் சட்டவிரோதமாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை மூடை, மூடையாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 29,500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து கணேசை கைது செய்தனர்.
பறிமுதல்
டி.கல்லுப்பட்டி அருகே வில்லூர் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு குறித்து போலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வேன் ஒன்று வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 331 கிலோ இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காத்தான்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (29) என்பவரை கைது செய்தனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் ஆவிலிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், சாணார்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.