450 மதுபாட்டில்கள் பறிமுதல்


450 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

வாணியம்பாடி அருகே 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்புறம் அரசு மதுபான பாட்டில்களை தொழிலாளர் தினத்தன்று காலை முதல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தனிப்படை போலிசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசு மதுபான கடைக்கு பின்புறமாக கள்ளத்தனமாக விற்பனைகாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த துரையேரி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story