46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 9 May 2023 12:30 AM IST (Updated: 9 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

தேனி

100 சதவீதம் தேர்ச்சி

தேனி மாவட்டத்தில் 70 அரசு பள்ளிகள் உள்பட 146 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதினர். இதில், 8 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 33 தனியார் பள்ளிகள் என மொத்தம் 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு:-

பாலக்கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி, ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளி, கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, மேலக்கூடலூர் ஆர்.எம். அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி.

தென்கரை புனித ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டி முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி புனித ஏஞ்சல்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிநாயக்கன்பட்டி எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி, கீழக்கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வஞ்சர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஏ.எம்.எச்.என்.யு. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஏஞ்சல் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

கம்பம், சின்னமனூர்

போடி காமராஜர் வித்யாசாலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சடையால்பட்டி ஸ்ரீஹயக்ரீவர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி மதுரை சி.இ, ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடமலைக்குண்டு ஹயக்ரீவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

ஊஞ்சாம்பட்டி பாலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி ஜி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அல்அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் சி.என்.எம்.எஸ். சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாகமணியம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி.

கம்பம் ராமஜெயம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் ஸ்ரீஅரவிந்தர் பாலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் ஸ்ரீவிகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் தி கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேவாரம் டி.எச்.என்.யூ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுக்காங்கல்பட்டி குட்சம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ. மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


Related Tags :
Next Story