பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த ஆய்வில்வெல்ல ஆலைகளில் 46 டன் சர்க்கரை பறிமுதல்11 பேர் மீது வழக்குப்பதிவு


பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த ஆய்வில்வெல்ல ஆலைகளில் 46 டன் சர்க்கரை பறிமுதல்11 பேர் மீது வழக்குப்பதிவு
x

பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த ஆய்வில் வெல்ல ஆலைகளில் இருந்து 46 டன் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

வெல்ல ஆலைகளில் ஆய்வு

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு சில வெல்ல ஆலைகளில் வெள்ளை சர்க்கரை கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுக்கள் ஓமலூர், காமலாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில ஆலைகளில் வெல்லம் தயாரிப்பதற்காக கலப்படம் செய்ய வெள்ளை சர்க்கரை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

46 டன் பறிமுதல்

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த ஆய்வில் கலப்படத்துக்காக வெல்ல ஆலைகளில் சர்க்கரை பதுக்கி வைத்திருந்தனர். 10 ஆலைகளில் இருந்தும், மொத்த சர்க்கரை வியாபாரி ஒருவரிடம் இருந்தும் 46 டன் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக வெல்ல ஆலைகளின் உரிமையாளர்கள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.


Next Story