465 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தில் 465 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தில் 465 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள்துறை சார்பில் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி 465 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் பிறந்த மாதம் முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும், பிறந்த மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
6 மாதம் முதல் 6 வயது வரை
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்தக்கூடிய வாய்வழி உணவு வழங்கி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த மாதம் முதல் 6மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 133 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 266 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும்.
465 ஊட்டச்சத்து பெட்டகங்கள்
பிறந்த மாதம் முதல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 199 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 199 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் என மொத்தம் 465 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) நரேந்திரன், (வேளாண்மை) ஜெயபாலன், துணை இயக்குநர் (சுகாதாரம்) குமரகுருபரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் அலுவலர் (பொ) சியமளா மற்றும் தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.