செம்பனார்கோவிலில் 48 மில்லி மீட்டர் மழை பதிவு


செம்பனார்கோவிலில் 48 மில்லி மீட்டர் மழை பதிவு
x

செம்பனார்கோவிலில் 48 மில்லி மீட்டர் மழை பதிவு

மயிலாடுதுறை

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 2 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு முதல் படிப்படியாக மழை குறைய தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 48 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சீர்காழி-24, மயிலாடுதுறை -22, தரங்கம்பாடி-22, மயிலாடுதுறை -13, மணல்மேடு-17, கொள்ளிடம்-5. இந்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story