துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 48 பவுன் நகை மாயம்


துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 48 பவுன் நகை மாயம்
x

சென்னை வியாசர்பாடியில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் 48 பவுன் நகை மாயமானது. இதுக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி முனிவேல் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). இவர், சர்மா நகரில் ரெடிமேடு துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் படுக்கை அறையில் உள்ள சோபாவில் 48 பவுன் நகையை மறைத்து வைத்திருந்தார். நேற்று பார்த்தபோது அந்த நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாரியப்பனின் உறவினர்கள் குடும்பத்துடன் வந்து ஒரு மாதம் தங்கி விட்டு கடந்த மாதம் 27-ந்தேதிதான் ஊருக்கு சென்றதாக தெரிகிறது. எனவே உறவினர்கள் யாராவது நகையை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story