திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது; ரூ.2½ கோடி பொருட்கள் மீட்பு


திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது; ரூ.2½ கோடி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 589 திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்


கோவையில் 589 திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

செல்போன்கள் மீட்பு

கோவை மதுக்கரை, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காணாமல் போன மற்றும் பொதுமக்கள் தவற விட்ட 153 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு ரூ.23 லட்சம் மதிப்பிலான 153 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் தவற விட்ட மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதன்படி இதுவரை ரூ.90 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 604 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் செல்போன் காணாமல் போனால் நிச்சயம் அது திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

551 கிலோ கஞ்சா பறிமுதல்

நடப்பாண்டில் இதுவரை 371 கஞ்சா விற்பனை குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 515 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.73½ லட்சம் மதிப்பிலான 551 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக 951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,001 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

திருட்டு வழக்கில் 491 பேர் கைது

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 310 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோவையில் நடப்பாண்டில் இதுவரை 589 திருட்டு வழக்குகளில் 491 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story