4, 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி 11 யூனியங்களில் உள்ள 12 மையங்களில் நேற்று தொடங்கியது. இதில் 1,905 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி 11 யூனியங்களில் உள்ள 12 மையங்களில் நேற்று தொடங்கியது. இதில் 1,905 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
எண்ணும் எழுத்தும்
கொரோனா கால கற்றல் இடைவெளியை குறைக்கும் பொருட்டு கடந்த 2022-ம் ஆண்டு முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டப்படி 2025-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலைப்பள்ளிகளில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புரிந்து வாசித்து எழுதுதல் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களை பெற்றிருக்க வேண்டும்.
விரிவாக்கம்
குழந்தைகளுக்கு தொடர்ந்து மகிழ்ச்சிகரமான கற்றல், கற்பித்தல் அனுபவங்களை வழங்கிட எண்ணும் எழுத்தும் திட்டத்தை 2023-2024-ம் கல்வியாண்டில் இருந்து 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தற்போது 4 மற்றும் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுகிறது. கிருஷ்ணன்கோவிலில் தனியார் கல்லூரியில் பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வ லட்சுமி, மலர்கொடி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பாலையம்பட்டி மாவட்ட கல்வியயில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் அழகப்பன் தொடங்கி வைத்து பேசினார். இந்த பயிற்சியில் 1,905 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.