ரூ.5 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது


ரூ.5 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, வெல்லம் வாங்கி ரூ.5 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, வெல்லம் வாங்கி ரூ.5 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வியாபாரி

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கோபி (வயது 40). இவர் பொங்கல் பண்டிகைக்காக உடையார்பாளையத்தில் கடை நடத்தி வரும் நாகராஜ் என்பவரிடம் ரூ.85 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்கவில்லை.

அதுபோன்று ஈரோட்டை சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்துக்கு வெல்லம் வாங்கினார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கு கரும்பு வாங்கினார். அதற்குரிய பணத்தையும் அவர் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

ரூ.5 லட்சம் மோசடி

இதனால் பொருட்கள் கொடுத்த 3 பேரும் பலமுறை கோபியி டம் பணத்தை கேட்டனர். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.

மேலும் அவருடைய செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து நாகராஜ், மேகநாதன் உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கோபி மீது மோசடி உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் அவர் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்துக்கு வெல்லம், கரும்பு மற்றும் எண்ணெய் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் கோபியை கைது செய்தனர். பின்னர் அவரை கோவையில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோபியை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story