சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேர் கைது


சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை, ஜன

கோவை மாநகர பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

கோவை மாநகர பகுதியில் ரேஸ்கோர்ஸ், அரசு குடியிருப்புகள், பங்களாக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்த மரங்களை இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் நடைபெற்றன.

இதை தடுக்க கோவை வ.உ.சி. தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்க ளுக்கு இரும்பு கூண்டு அமைத்து பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கோவை கலெக்டர் பங்களா, நெடுஞ்சாலைத்துறை குடியிருப்பு, சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை விசாரணை

எனவே சந்தன மர கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி முத்து, உமா, போலீஸ்காரர் கள் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி, அங்கு சந்தேகத்துக்கு இடமாக தங்கி இருந்து 5 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர். இதனால் போலீசார் அந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

5 பேர் கைது

இதில், அவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 39), தாளவாடியை சேர்ந்த உமையுன் ஷேக் (70), முகமது அலிஜின்னா (30), திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்த செந்தில் (38), பீகாரை சேர்ந்த பிஸ்டர் (29), என்பதும், அவர்கள், கோவையில் பல இடங்களில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியதும் தெரியவந்தது. உடனே போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கைதான 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் கோவையில் கடந்த வாரத்தில் 3 இடங்களில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது யார்? அந்த மரங்களை எங்கு விற்பனை செய்தனர்? இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story