கஞ்சா விற்ற 5 பேர் கைது
நாகர்கோவிலில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று மேல பெருவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளுடன் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பியோட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த கிறிஸ்து ராஜா (வயது 37), சகாய ஜெனிபர் (30), ஜினோ (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல வடசேரி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலைபகுதியில் கஞ்சா விற்றதாக வட்டவிளை பகுதியை சேர்ந்த முகமதுதாரிக் (19), வேத நகர் ரிபாஸ்கான் (19) ஆகியோரை வடசேரி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.