புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை,

குளித்தலை பஸ் நிலையம், கோட்டமேடு, சத்தியமங்கலம், அய்யர்மலை ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்பேரில் அந்தப் பகுதிகளுக்கு சென்ற போலீசார் குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள தங்களது கடையில் புகையிலை பொருட்களை வைத்து விற்ற குளித்தலை புதுக்கோர்ட் தெருவை சேர்ந்த ரெங்கசாமி (வயது 54), கீழதாளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47), கோட்டமேடு பகுதியில் உள்ள மளிகை கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (29), சத்தியமங்கலம் பகுதியில் மளிகை கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்ற ராஜாதி (53), அய்யர்மலை பகுதியில் தனது மளிகை கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற வேங்காம்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி (35) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது கடையில் இருந்த புகையிலை பொருட்கள், பாக்கு போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story