தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய 5 பேர் கைது


தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய 5 பேர் கைது
x

தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

தொழிலாளியை இரும்பு கம்பியால் குத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் தெருவில் இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஒருவர் இரும்பு கம்பியால் தமிழ்செல்வனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமார் (52), நவீன் குமார் (28), ரமேஷ்பாபு (27), ராஜேஷ் (32), ஹரிஷ் (31) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story