தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது


தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது
x

தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 26). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் மேல் யாரோ நடப்பது போல சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தபோது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் அவரை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அடுத்த நாள் தேவதாஸ் தனது உறவினருடன் சேர்ந்து எதற்காக தனது வீட்டின் மேல் நின்றாய் என்று அஜித்குமாரிடம் கேட்டுள்ளனர். இந்தநிலையில் தேவதாஸ் தனது அத்தை வீட்டில் இருந்த போது அங்கு சென்ற அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சசிகுமார் (23), பிரசாந்த் (20), நவநீதன் (19), சந்தோஷ் (20) ஆகிய 5 பேரும் சேர்ந்து தேவதாசின் அத்தை வீட்டின் ஓட்டை உடைத்து முன் பக்க கதவை உடைத்து தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்தபோது அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தேவதாசுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது தொடர்பாக தேவதாஸ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமார், சசிகுமார், பிரசாந்த், நவநீதன், சந்தோஷ் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story