ராசிபுரத்தில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாட்டு பணிக்கு பூமிபூஜை

நாமக்கல்
ராசிபுரம்:
நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முதல் பழைய நீதிமன்றம் வரை 750 மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிக்கான பூமிபூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன், நகராட்சி துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், நகராட்சி கவுன்சிலர்கள் விநாயகமூர்த்தி, கலைமணி, நடராஜன், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






