விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி
விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி சார்பில், தன்னிறைவு விவசாயிகளிடம் காண்போம், விவசாயத்தில் முன்னேற்றம் காண்போம் என விவசாயிகளுக்கான இரு வார விழா மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களின் கண்காட்சி திருப்பத்தூரரில் நடைபெற்றது. கிளை மேலாளர் வி.கவுதம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பேங்க் ஆப் பரோடா வங்கி பிராந்திய மேலாளர் எம்.பத்தான் கலந்துகொண்டு, கடனை திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் மேலும் விவசாயிகள், 450 பேர் கொண்ட மகளிர் சுய உதவி குழுக்கள், 13 விவசாய குழுக்களுக்கு ரூ.5 கோடியே 80 லட்சம் கடன் உதவி வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராதா, வேளாண் உதவி பொறியாளர் ராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் ஜேம்ஸ், முருகேசன், வேளாண் மற்றும் வேளாண்மை கருவிகள் திட்ட அலுவலர் வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியில் விவசாய கண்காட்சியில் விவசாயம் சார்ந்த பல்வேறு அரங்குகள் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள், வங்கி விவசாய அலுவலர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுநிலை மேலாளர் ஆர்.பாலகுமார் நன்றி கூறினார்.