சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை
திருப்பூர் அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் 642 மாடுகள் 146 வாகங்களில் கொண்டுவரப்பட்டது.
மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர். மாட்டுசந்தையில் கறவை மாடுகள் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பசு கன்றுகள் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை ஆனது. எருமை கன்றுகள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.5 கோடிக்கு அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி நாள் என்பதாலும் வெளியூர் மாடுகள் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து இருந்தது.