5 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்


5 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே 5 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்

கடலூர்

ராமநத்தம்

சந்தனமரங்கள்

ராமநத்தம் அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் இளங்கோவன்(வயது 40). இவர் தனது மக்காச்சோள வயலில் இடை இடையே 67 சந்தன மர கன்றுகளை நட்டு கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சந்தனமரங்களை வெட்டி விற்பனை செய்வதற்காக இளங்கோவன் அரசின் அனுமதியை பெற்றிருந்தார். இது தொடர்பாக அவர் நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்று விட்டு மாலையில் வயலுக்கு வந்தார்.

கடத்தல்

அப்போது அங்கே 5 சந்தனமரங்களை யாரோ மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளஙகோவன் இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடா் சம்பவம்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பக்கத்து வயலை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான 15 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். அதே கும்பல்தான் இளங்கோவனுக்கு சொந்தமான சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடந்து இப்பகுதியில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ள சம்பவம் இப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story