5 நாள் பட்டா திருத்த சிறப்பு முகாம்


5 நாள் பட்டா திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாள் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து உள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாள் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து உள்ளார்.

கணினி பட்டா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கணினி மூலம் பட்டா திருத்த முகாம் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. ராமநாதபுரம் உள்வட்டத்திற்கு ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திலும், தேவிப்பட்டிணம் மற்றும் மண்டபம் உள்வட்டங்களுக்கு அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், பெருங்குளம் உள்வட்டத்திற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கணினி மூலம் பட்டா திருத்த முகாம் நடைபெறுகிறது.

ராஜசிங்கமங்கலம் உள்வட்டத்திற்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், ஆனந்தூர் மற்றும் சோழந்தூர் உள்வட்டங்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கணினி பட்டா திருத்த முகாம் நடைபெறும். ராமேசுவரம் உள்வட்டத்திற்கு ராமேசுவரம் தாலுகா அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்திற்கு திருவாடானை தாலுகா அலுவலகத்திலும், மங்களக்குடி மற்றும் தொண்டி உள்வட்டத்திற்கு அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் புல்லூர் உள்வட்டத்திற்கு புலியூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் கணினி பட்டா திருத்த முகாம் நடைபெறும்.

சிறப்பு முகாம்

கீழக்கரை உள்வட்டத்தில் லெட்சுமிபுரம் சமுதாய கூடம், காஞ்சிரங்குடியிலும், திருப்புல்லாணி உள்வட்டத்திற்கு வெள்ளையன் சத்திரம், திருப்புல்லாணியிலும், திருஉத்திரகோசமங்கை உள்வட்டத்திற்கு சமுதாய கூடம், திருஉத்திரகோசமங்கையிலும் கணினி பட்டா திருத்த முகாம் நடைபெறும். பரமக்குடி உள்வட்டத்திற்கு பரமக்குடி தாலுகா அலுவலகத்திலும், போகலூர், மஞ்சூர் மற்றும் பார்த்திபனூர் உள்வட்டத்திற்கு அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கிளியூர் உள்வட்டத்திற்கு இ-சேவை மையம், பாண்டியூரிலும், நயினார்கோவில் உள்வட்டத்திற்கு இ-சேவை மையம், நயினார்கோவிலும் கணினி பட்டா திருத்த முகாம் நடைபெறும்.

முதுகுளத்தூர் உள்வட்டத்தில் முதுகுளத்தூர் (வடக்கு) மேல முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், முதுகுளத்தூர் (தெற்கு) கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், தேரிருவேலி மற்றும் காக்கூரில் உள்வட்டங்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திலும், கீழத்தூவல் உள்வட்டத்தில் சாம்பக்குளம் சமுதாய கூடத்திலும், மேலகொடுமலூர் உள்வட்டத்தில் அந்த கிராம இ-சேவை மையம் அலுவலகத்திலும் முகாம் நடைபெறும்.

பயன்பெறலாம்

கமுதி உள்வட்டத்தில் கமுதி (கிழக்கு) மற்றும் கமுதி (மேற்கு) மற்றும் அபிராமம் உள்வட்டங்களில் அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கோவிலங்குளம் உள்வட்டத்தில் புதுக்கோட்டை குரூப், பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திலும், பெருநாழி உள்வட்டத்தில் பெருநாழி நூலக கட்டிடத்திலும் நடைபெறும். கடலாடி உள்வட்டத்தில் கடலாடி, எஸ்.தரைக்குடி, ஆப்பனூர், மேலச்செல்வனூர், சாயல்குடி மற்றும் சிக்கல் உள்வட்டங்களில் அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.

தமிழ்நிலம் கணினி மென்பொருளில் பட்டா திருத்த கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் முகாமில் மனு கொடுத்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story