தி.மு.க.வினர் 5 பேர் படுகாயம்
கன்னிவாடி அருகே கார் தலைகுப்புற கார் கவிழ்ந்து தி.மு.க.வினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல்
கன்னிவாடி அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் இருந்து திண்டுக்கல்லில் நடைபெறும் உண்ணாவிரத்தில் கலந்து கொள்வதற்கு தி.மு.க.வினர் நேற்று காலை காரில் வந்தனர். அந்த காரை, ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த சித்திக் (வயது 39) ஓட்டினார். திண்டுக்கல் அருகே எரணம்பட்டி என்னுமிடத்தில் வந்தபோது டயர் வெடித்து கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தி.மு.க.வை சேர்ந்த முகமதுமீரான் (21), முகமதுபயஸ் (20), அப்துல்பயஸ் (23), பகத்துல்லா (26) உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story