5 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்போன்


5 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்போன்
x

5 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்போன்

திருவாரூர்

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீ்ர்க்கும் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சென்போன்களை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 184 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு இலவச செல்போனை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு வாகனம்

தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் 'நான் முதல்வன்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி கல்லூரி கனவு குறித்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முழுவதும் இருந்து 78 பள்ளிகளை சேர்ந்த 780 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பேசுகையில், கல்லூரி உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு சென்றால் அங்குள்ள சூழ்நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி படிப்பை முடித்து விட்டு மருத்துவம், கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்களது மேற்படிப்பை தொடர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் விஜயா உள்ளிட்ட கல்வி துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story