பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 விடுதி கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 விடுதி கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!
x

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சார்பில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு பல்வேறு முனைப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 3 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், கடலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதிக் கட்டிடம்;

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம், தஞ்சாவூரில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம், மதுரை மாவட்டம், மேலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம் என மொத்தம் ரூ.12.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா. சம்பத், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனீஷ் சாப்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story