மதுரையில் 5 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை


மதுரையில் 5 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை
x

மதுரையில் நேற்று 5 மணி நேரம் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மதுரை

மதுரையில் நேற்று 5 மணி நேரம் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காலையில் வெயில்

மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. ஆனால், நேற்று காலையில் மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்றுடன் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. அதன்பின்னரும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதுபோல், தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

சாலைகளில் வெள்ளம்

மதுரை பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழையால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் படிப்படியாக கொட்டும் மழையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது. தொடர்ந்து இரவு விடிய, விடிய தூறலுடன் மழை பெய்து கொண்ேட இருந்தது.

போக்குவரத்து மாற்றம்

மதுரையில் மழையால் நேற்று இரவு தேவர் சிலை வழியாக தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேவர் சிலையில் இருந்து கோரிப்பாளையத்திற்கு செல்லும் பாதையை மறைத்து அரசு மருத்துவமனை வழியாக செல்லும் வகையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனை அறியாமல் கோரிப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தார்கள். நீண்ட நேரம் காத்திருந்தும் எந்தப் பஸ்சுகளும் இந்த பகுதியில் வரவில்லை, இதனால் ஏமாற்றம் அடைந்த பயணிகள் அதனைத் தொடர்ந்து மாற்றுப் பகுதிக்கு சென்று பஸ்சில் ஏறி தங்கள் இருப்பிடம் சென்றனர்.


Related Tags :
Next Story