தனியார் பஸ் லாரி மோதல் 5 பேர் காயம்
வேப்பூர் அருகே தனியார் பஸ் லாரி மோதல் 5 பேர் காயம்
ராமநத்தம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து நேற்று முன்தினம் காலை திட்டக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வேப்பூர் அருகே விளம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது. அப்போது சேலத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்த லாரி தனியார் பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்டிரைவர் கள்ளக்குறிச்சி சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 40) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் விருத்தாசலம் அருகே உள்ள பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த கணேசன்(66), திட்டக்குடி தொளார் கிராமம் திருநாவுக்கரசு(60), விளம்பாவூர் ராஜவேல் மனைவி செல்வி(40), ரெட்டாக்குறிச்சி அரசன் மனைவி ஜொதிமணி (39) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேசன் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சீர்காழியை சேர்ந்த ராஜாமணி மகன் ஸ்ரீதர்(25) என்பவர் மீது வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.