குளவி கொட்டி 5 பேர் காயம்
நெல்லிக்குப்பம் அருகே குளவி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் கிராமத்தை சேர்ந்த 5 பேர், நேற்று காலை அங்குள்ள ரெயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் இருந்து திடீரென பறந்து வந்த குளவிகள் நடந்து சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் வலியால் அலறி துடித்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே ரெயில்வே நிலையம் பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் இருந்த குளவிகளை அழித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story