5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு - ஆவின் விளக்கம்


5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு - ஆவின் விளக்கம்
x

5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சென்னை,

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட்டானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 1 லிட்டர் பாக்கெட்டாகவும் வணிக நிறுவன பயன்பாட்டுக்கு 5 லிட்டர் பாக்கெட்டாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ரூ.44 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு 5 லிட்டர் பால் பாக்கெட் ரூ.210 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 5 லிட்டர் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை இன்று ரூ.10 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.210 க்கு விற்பனையாகி வந்த ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் ரூ.10 உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில் ரூ.220 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story