மேலும் 5 கைதிகள் விடுதலை


மேலும் 5 கைதிகள் விடுதலை
x

வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர்

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் ஜெயிலில் அண்ணா பிறந்தநாள் யொட்டி விடுதலை ஆவதற்கு 46 கைதிகள் தகுதி பெற்றனர். இதில் 14 பேர் ஏற்கனவே விடுதலையாகி சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை மேலும் 5 கைதிகள் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்துள்ளனர்‌. முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரஹ்மான் அவர்களிடம் வழங்கினார். 75-வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி 7 பேர் விடுதலையாக தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் ஒருவர் விடுதலையாகி உள்ளார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story